MathsWin's
Combined Mathematics

The First website for Combined Mathematics In Sri Lanka

என்னைப் பற்றி....

என்னைப் பற்றிக் கூறுவதற்கு அதிகம் இல்லை. நான் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவன். கொழும்பு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவன்.கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். எனக்கென சில கணித முடிபுகளை கண்டுபிடித்துள்ளேன். தகுந்த காலம் வரும் போது அவற்றை நான் வெளியிடுவேன்!  என் சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா? என்று சிந்தித்துக் கொண்டிருப்பவன்.

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக இணைந்த கணிதப் பாடத்தை இறுவட்டு வடிவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டேன்.(18.06.2008)


இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக இணைந்த கணிதப் பாடத்தை இறுவட்டு(VCD/DVD) வடிவில்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டேன்.(18.06.2008)
தற்போது இணையம் மூலமாக எனது இளம் தலைமுறையினருக்கு ஏதாவது செய்யலாமா? என்று பார்க்கிறேன்.

 

என்னுடைய‌ சமூகத்தின் ஆதரவும் மாணவர்களின் ஆர்வமும் இருப்பின் இந்த முயற்சி வெற்றி பெறும் என திடமாக‌ நம்புகின்றேன்.

ஆத்ம திருப்திக்காக இணைந்த கணிதப் பாடத்தை கற்பிக்கிறேன்.

 தொடர்புகளுக்கு:-
A.Harishan
173A,Sri Saranankara Road,
Kalubowila
Dehiwela
Sri Lanka

T.P:- 0715697893

 

இதை எனக்காகச் செய்யவில்லை...................

இதை எனக்காகச் செய்யவில்லை. எனக்காகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எழுந்ததில்லை. ஆனால் செய்தேன். அந்த உந்துதல் எனக்கு எப்படி வந்தது என்று தெரியாது. ஆனால் அது யாருக்காவது வந்திருக்க வேண்டிய ஒன்று. அந்த சந்தர்ப்பம் என் வாசல் கதவைத் தட்டியது. ஒரு புள்ளி மட்டும் வைத்தேன். வட்டம் வரையப்பட்டது. இத்தனை வேகம், இத்தனை அசாத்திய துணிச்சலை எவரோ ஒருவர் எனக்குள் விதைத்திருக்க வேண்டும்.

எல்லாவித சுய நலங்களுக்கும் அப்பாற்பட்டே இதை நான் செய்தேன் என்பதை துணிந்து கூறுகின்றேன்.
அதனால் தான் மிகக் குறுகிய காலத்துள் இதை சாதிக்க முடிந்தது என்று கருதுகின்றேன்.

இதை ஒரு சாதனையாக நான் கருதவில்லை. என் இயல்பின் ஒன்றாகவே கருதினேன். மூச்சுவிடுவதை ஒரு சாதனை என்று நீங்கள் சொல்வீர்களா? அதுபோலவே இதுவும். நான் கற்றுக் கொண்டதைக் கொடுக்க
விரும்பினேன். அவ்வளவுதான்.

இதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றீர்கள் என்று கேட்கலாம். ஆம்! சரியான கேள்வி. வெற்றி என்பது போய் அடைய வேண்டிய ஒன்றல்ல. அது ஒரு பயணம். நான் இன்னும் ஒரு பயணியாகவே இருக்கிறேன். தொடர்ந்தும் இருப்பேன். காலத்தின் கட்டாய தேவையாகவே இதனைச் செய்தேன். காலம் விரைவில் உணர்ந்து
கொள்ளும். அப்போது இந்தப் பாரத்தை அது அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லும்.

நான் பாராட்டப்பட வேண்டியவனல்ல. நான் அதை எவரிடமும் அணுவளவும் எதிர்பார்ப்பவனும் அல்ல.
ஆனால் இந்த முயற்சிக்கு பின்புலத்தில் நின்று முகம் தெரியாது முகத்தைக் காட்டாது உதவிசெய்தவர்கள்
நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே!!

நான் எந்தவொரு களங்கத்தையும் சுமக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு பார்வையாளனாக இருக்க விரும்பவில்லை. பங்களிப்பவனாகவே இருக்க விரும்பினேன்.
ஆற்றல் இருப்பவர்கள் பார்வையாளர்களாக இருப்பதை விட சமுகத்திற்கு செய்யும் பெருந்துரோகம் வேறெதுவுமில்லை.

என்னை விட ஆற்றல் மிக்கவர்கள் இருந்தார்கள். அவர்கள் மௌனமாயிருந்தார்கள். தேவையான நேரத்தில் சமுகத்திற்கு வழங்க வேண்டியவற்றை வழங்காது வாளாயிருந்தார்கள். ஆற்றல் மிக்கவர்களின் மௌனம்
சமுதாய சீரழிவிற்கே வழி வகுக்கும். அவர்கள் தூங்கவில்லை. தூங்குவது போல் நடித்தார்கள். நான் சற்று தட்டி எழுப்பினேன். இனி அவர்கள் விழித்துக் கொள்வார்கள் என நினைக்கின்றேன். இந்த விடயத்தில் அவர்களை நான் இனியும் தூங்கவிடப்போவதில்லை.

எம்மால் பட்டினி கிடக்க இயலும். ஆனால் சிந்தனை செய்யாமல் இருக்க முடியாது.
சிந்திக்கும் உரிமையை எவரும் எம்மிடமிருந்து பறித்துவிட முடியாது.


நான் இங்கு விதைத்தது ஒரு சிறிய சிந்தனை. இலட்சோப இலட்சம் யூதர்கள் கொன்றொழிக்கப் பட்ட பின்னரும்
இன்னும் அவர்கள் உலகில் மூச்சு விடுகிறார்கள் என்றால் என்னைப் பொறுத்தவரை அது யூதர்களின் அறிவியல்
வளர்ச்சியே! ஐன்ஸ்டீன் எனும் யூதனின் சிந்தனைப் பொறியே!!!

எமக்குள் எத்தனை ஐன்ஸ்டீன்கள் என்பதை காலம் தீர்மானிக்கட்டும். அதுவரை ஆற்றல் மிக்கவர்கள்
விழித்திருக்கட்டும். சமுகத்திற்கு அவர்கள் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்கட்டும்!

இந்த உலகோடு வலிமையாக மோதக் கூடிய அறிவியல் எனும் ஆயுதம் தாங்குவோம்! உலகை நின்று
திருப்பிப் பார்க்க வைப்போம்!!

Recent Videos

718 views - 0 comments
535 views - 0 comments
939 views - 1 comment
1448 views - 2 comments